களைகட்டும் தீபாவளி ஷாப்பிங் தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீபாவளி ஷாப்பிங் களைகட்டி வருகிறது. தொடர் விடுமுறை என்பதால் நேற்று முதலே துணிக்கடை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. குறிப்பாக சென்னையில் தி.நகர், பாண்டி பஜார். குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உயர் கோபுரங்கள் அமைத்து போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி சனிக்கிழமை இன்று முதல் திங்கட்கிழமை அக்.24ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால், கண்மாய், குளம், குட்டை நிரம்பியுள்ளன, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், விடுமுறை நாட்களில் மாணவர்கள், பொதுமக்கள் குளிக்க செல்ல வேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே தீபாவளியை கொண்டாடுங்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.