சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடினார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் அண்ணா இவ்வளவு சோர்வாக இருக்கிறீர்கள்? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என தனது கவலையை கூறினார்.
அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், என்னிடம் எல்லோரும் ஏன் இப்படி சோர்வாக இருக்கீங்க? உடம்பு சரியில்லையா? என கேட்கிறார்கள். வேறு ஒன்றும் இல்லை மாவீரன் இரவு படப்பிடிப்பு நடந்தது. அது முடிந்ததும் இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கிவிட்டு பகலில் பிரின்ஸ் ப்ரோமோஷனற்கு வந்து விட்டேன். தூக்கம் ரொம்ப கம்மியா இருந்துச்சு. ரிலீஸ் ஆனதும் உங்களோட கொண்டாடிட்டு ஜாலியா தூங்க வேண்டியது தான் என கூறினார். இந்த நிலையில் படம் நேற்று ரிலீஸாகி உள்ளது. ஆகையால் இனி சிவகார்த்திகேயன் சரியாக உறங்குவார் குறிப்பிடத்தக்கது.
Q: Rombha tired ah irukuringa Thangam ❤️🥺 pls take care Annaey ❤️😍
Ore req dhan pls do take care 😘❤️😘 @Siva_Kartikeyan Annae #AskSK #AskPrince https://t.co/rOAc6xfFY5…
– @itz_nandhinisk— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 20, 2022