Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்”…. சின்மயி ஆதங்கம்….!!!!!

பாலூட்டும் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார் சின்மயி.

பிரபல பாடகியான சின்மயி நடிகர் ராகுல் ரவீந்திரனை சென்ற 2014 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு அண்மையில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதனை சின்மயி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருக்கும் போது எந்த புகைப்படத்தையும் பகிரவில்லை.

இதனால் சின்மயி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதாக விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு பதிலடி தரும் வகையில் தனது 32 வது வார கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார். மேலும் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பதிவிட்டார். இதற்கு நெட்டிசன் ஒருவர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என கமெண்ட் செய்திருந்தார்.

இதைப் பார்த்து ஆதங்கமடைந்த சின்மயி கூறியுள்ளதாவது, இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன். இதற்கு தமிழர் ஒருவர் இதனை பதிவிட்டு இருக்கின்றார். நான் எனது கர்ப்பகால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் ஒன்று இருக்கிறது. ஏற்கனவே கரு சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை பகிரவில்லை. என்னை துஷ்பிரயோகம் செய்தவர். என் குழந்தைகளின் தந்தை என கூறுகிறார். நம்ம ஊரு பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்திலேயே ஊர்னது, வளர்ப்போம் அப்படி என பதிவிட்டு தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார்.

Categories

Tech |