Categories
சினிமா தமிழ் சினிமா

அட! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே…. “வாத்தி” டிசம்பருக்கு வராதாம்…. கவலையில் ரசிகர்கள்‌…..!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி திரைப்படத்தை வெங்கி அட்லூரி தயாரிக்கிறார். இப்படத்தில் சம்யுக்தா ஹீரோயினாக நடிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார்‌. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ரிலீசாக இருக்கும் நிலையில், தமிழக வெளியீடு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் கைப்பற்றியுள்ளார். மேலும் வாத்தி திரைப்படம் டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் பணிகள் முடிவடையாததால் தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர். அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |