உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இது வெறும் சேட் வசதியை மட்டும் கொண்டு இயங்காமல் வீடியோ கால் வசதி, கால் பேசும் வசதி மற்றும் பணம் அனுப்பும் வசதி ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்நிலையில் ஆப்பிளின் சமீபத்திய புதுப்பிப்பின் படி ஐஓஎஸ் 10 மற்றும் ஐஓஎஸ் 11 போன்களில் அக்டோபர் 24ஆம் தேதி முதல் whatsapp செயலி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ் அப் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு உங்களது ஐஓஎஸ் தளத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும்,ஐபோன் பயனர்கள் பயன்பாட்டை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஐ ஓ எஸ் 12 அல்லது புதிய ஓ எஸ் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 4 மற்றும் ஐபோன் 4s பயனர்கள் இனி வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் தங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் whatsapp செயலியை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பை வைத்திருக்க வேண்டும் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.