Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பண்டிகை கால போலி ஆஃபர்கள்…. அலர்டா இருங்க…. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்கின்றனர். அதாவது ஜவுளி, வாஷிங் மெஷின் மற்றும் டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கி வரும் நிலையில் இது போன்ற வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் நோட்டிபிகேஷன் ஆக வருகின்றது.

அதில் மோசடி செய்யும் நபர்கள் விளம்பரங்களில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக காண்பிக்கிறார்கள். அதனுடன் சேர்த்து ஒரு லிங்க் தரப்படுகிறது.இதனை நம்பி மக்கள் கிளிக் செய்து பொருள்களை வாங்க புக் செய்து பணத்தையும் கட்டிவிட்ட பிறகு அந்த லிங்கை ஓபன் செய்தால் மீண்டும் உள்நுழைய முடியாமல் போய்விடுகின்றது.

தற்போது பண்டிகை காலம் என்பதால் இது போன்ற மோசடிகள் அதிக அளவு நடைபெற்று வரும் நிலையில் இதை தொடர்பாக காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பண்டிகை காலங்களில் ஆன்லைன் மூலம் பொருள் விற்பனை மோசடி அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மோசடி குறித்து 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |