3 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தாமேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அதில், குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம்,ஆசிரியர் கல்விக்கான தேசிய கல்வி திட்டம் மற்றும் முதியோர் கல்விக்கான தேசிய கல்வி திட்டம் ஆகிய நான்கு பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.அனைவருக்குமான தரமான கட்டணம் இல்லா குழந்தைகள் முன் பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தை உறுதிப்படுத்துவது எந்த ஒரு நாடும் அதன் எதிர்காலத்திற்கு செய்யப்படும் சிறந்த முதலீடாகும்.
அவ்வகையில் இந்த கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் என்றால் சமையலறையில் இருக்க வேண்டும்.கருப்பு நிற கொண்டவர்கள் தீயவர்கள் போன்ற தவறான விஷயங்கள் பாடப் புத்தகங்களில் இடம்பெறக்கூடாது என்றும் மூன்று முதல் 8 வயது வரை குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.