பீகார் மாநிலம் போஜ்பூரை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் தாயா குமார்(12) திடீரென காணாமல் போனார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் சிறுவனை தேடி வந்தனர்.இதனிடையே சிறுவனின் உடல் சிறந்த நிலையில் ரயில்வே தண்டவாளம் அருகே கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் படிக்கும் அதே பள்ளியில் அவரை நான் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அக்காவுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்ற நிலையில் சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி உதவ சிறுவன் முடிவெடுத்துள்ளார்.அதன்படி தேர்வு நடைபெற்ற போது தேர்வு அறைக்கு வெளியே இருந்து சிறுவன் பிட் பேப்பரை அக்காவை நோக்கி வீசியுள்ளார். ஆனால் அந்த பேப்பர் அக்காவின் அருகில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மற்றொரு மாணவியின் மேலே விழுந்தது.
அதனை பார்த்த அந்த மாணவி சிறுவன் தனக்கு காதல் கடிதம் கொடுப்பதாக நினைத்து அதே பள்ளியில் படிக்கும் தனது அண்ணனிடம் கூறியதை தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த மனைவியின் அண்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுவனை தாக்கி அடித்தே கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றார்.இதனை தொடர்ந்து போலீசார் மாணவியின் அண்ணன் மற்றும் அவரின் நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.