செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, பாஜக சொன்னதால் NIAவுக்கு மாற்றம் செய்யல. ஒரு விபத்து நடக்குது. ஒரு குண்டுவெடிப்பு நடக்குது. அந்த குண்டுவெடிப்புக்கு பின்னாடி யார் இருக்காங்க ? அதை விசாரணையை செஞ்சி, அதற்கு பிறகு பார்க்கும்போது, இது பின்னாடி வெளிமாநிலத்தவருடைய தொடர்பு இருக்கலாம், வெளிநாட்டவருடைய ஈடுபாடுகள் கூட இருக்கலாம் என்று சொல்லிட்டு அதை முறையாக தேசிய புலனாய் முகமைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
நீங்கள் சொல்லுற மாதிரி 24 மணி நேரம், 48 மணி நேரத்தில் முடிவு எந்த அரசாலும் எடுக்க முடியாது. முறையான விசாரணை செய்து, அதற்கு உண்டான எல்லாத்தையும் பண்ணித்தான் இன்னைக்கு எல்லாம் நடந்திருக்கு. நீங்க சொல்கின்ற குற்றச்சாட்டை பொருத்தவரை முறையான விசாரணை நடத்திருக்கிறது. சரியான முறையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பிஜேபி சைடில் என்ன சொல்கிறார்கள் என்றால் ? தமிழ் மொழியை வளர்ப்பதற்காக என சொல்லி, ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்காங்க. அவங்க கொண்டு வரும் இந்தி திணிப்பை எதிர்த்து, திராவிட இயக்கம், திமுக, மதிமுக, பொதுவுடமை இயக்கங்கள் என நாங்க தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் பண்றோம். பாஜக சார்பாக அவர்களுடைய தலைவர் அமித்ஷா சொன்னதை தான் நாங்க சொல்றோம் என பாஜக தமிழ் மொழி வளர்ப்பு ஆர்ப்பாட்டத்தை விமர்சனம் செய்தார்.