தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகை அறிவித்துள்ளது. அதன்படிரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபுக் லேப்டாப் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான அடிப்படை அம்சங்களை கொண்டுள்ள இந்த லேப்டாப் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் இணையத்தளத்தில் இதன் விலை அதன் அசல் விலையான ரூ.36,000-லிருந்து 56% குறைக்கப்பட்டு ரூ.15,799-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு இந்த சலுகையை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.