செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,ஹிந்தி மொழி திணிக்கபடும் என நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது, பாஜக சார்பாக அவர்களுடைய தலைவர் அமித்ஷா சொன்னதை தான் நாங்க சொல்றோம். அவர் என்ன சொன்னார்னா? ஆங்கிலம் இல்லாத ஒரு பாரத உருவாக்கணும். இன்னைக்கு இந்திய வளர்ச்சிக்கு ஆங்கிலம் ஒரு தடையா இருக்கிறது. அதனால் நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டின் ஒற்றுமைக்கு, ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்கணும்னு சொல்லி இருக்காங்க.
புதிய கல்விக் கொள்கை 2022-இல் பாஜக அரசு சொல்லி இருப்பது, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி என்று சொல்லி இருக்கிறார்கள், அதை நாங்க வரவேற்கிறோம். ஏற்கனவே தமிழ் மீடியம் ஸ்கூல் எல்லாம் இருக்கு. ஆனால் ஆறாம் வகுப்பு முதல் அவங்க என்ன சொல்றாங்கன்னா ? 2ஆம் மொழியாக தாய்மொழி தவிர, வேற ஏதாவது இந்திய மொழியில் மட்டும் தான் எடுக்கணும்னு சொல்றாங்க.
அப்ப என்ன பண்ணுவாங்க நம்ம மாணவர்கள்? தமிழ் மொழி முதல் லாங்குவேஜ். பிறகு இரண்டாம் மொழியாக கன்னடம் எடுக்க போறதில்லை, மலையாளம் எடுக்க போறது இல்ல, தெலுங்கு எடுக்க போறது கிடையாது. வேற வழியில்லாமல் இந்தி எடுக்க போறாங்க. அதைத்தான் மறைமுகமா இந்தியை திணிக்கிறீங்க என்று சொல்கின்றோம். அமித் ஷாவே அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் என விமர்சனம் செய்தார்.