தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர்ஜ இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியே பெற்று உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை மட்டும் ரூ.465 கோடி கடந்து வசூல் செய்து வருகிறது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று இரு முன்னணி நட்சத்திரம் படங்கள் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்பட நேற்று வெளியானது. இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது தமிழகத்தில் 250 திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 4 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.