பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மதுபான பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் பீகார் அரசு ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்து உள்ளது. அதாவது அங்கு மது அருந்து சிக்குபவர்களின் வீட்டில் வாசலில் ஒரு போஸ்டரை போலீசார் ஒட்டுகின்றனர்.
அந்த போஸ்டரில் முதல் முறையாக பிடிபட்டால் அபராதம் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மீண்டும் மது அருந்தி பிடிப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 52,000 வீடுகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.