ரசிகர்கள் இந்த நடிகருடன் நடிப்பீர்களா என கேட்ட கேள்விகளுக்கு நடிக்க ஆசை உள்ளது என தெரிவித்துள்ளார் தமன்னா
சமீபத்தில் தமன்னா அவர்களால் அஸ்க் தமன்னா என்னும் ஹாஷ்டேக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் “எங்க தலையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா” என்று கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த தமன்னா வீரம் படத்தில் அஜித்துடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு பாடி மீண்டும் வாய்ப்பு வந்தால் யார் வேண்டாம் என்பார்கள் என்பதுபோல் பதில் அளித்திருந்தார்.
அதேபோல் மற்றொரு ரசிகர் சூர்யாவுடன் எப்பொழுது இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்டதற்கு “சூர்யாவுடன் நடிப்பது என்பது எனது கனவு” என பதிலளித்திருந்தார் தமன்னா.