சிம்பு சரியென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் வரும் என பதிலளித்துள்ளார் கௌதம் மேனன்
கௌதம் மேனன் இயக்கி சிம்பு மற்றும் த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் திரைக்கு வந்த 10 வருடங்களை கடந்த நிலையில் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இதனை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் கௌதம்மேனன் அவர்களிடம் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா பாகம் 2 வருமா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் சிம்பு அவர்கள் தலையசைத்தாள் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் உருவாவது நிச்சயம் என கூறியுள்ளார்.