Categories
மாநில செய்திகள்

“முதல்வர் கணினி தமிழ் விருது”…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு முதலமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப உலகம் முழுவதும் கணினி மொழி தமிழ் வழி பரவ செய்யும் வகையில், கணினி தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருட்களை உருவாக்குபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக விருது வழங்கப்படுகிறது. 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் பரிசீலனையில் இருக்கிறது. அதன் பிறகு தற்போது கடந்த 2021-ம் ஆண்டுக்கான கூடுதல் விண்ணப்பங்களும், நடப்பாண்டில் தனியார் நிறுவனத்திடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு தகுதியானவர்களுக்கு 2 லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும்

இதனையடுத்து 2018, 2019, 2020 ,2021 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை மட்டும் தான் விருதுக்கு அனுப்ப வேண்டும். இதைத்தொடர்ந்து விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதள பக்கமான www.tamilvalarchithurai.com என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்‌‌. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008 மற்றும் [email protected] போன்ற முகவரிகளில் அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-28190412, 044-28190412 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்பதோடு, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி விட வேண்டும்

Categories

Tech |