Categories
தேசிய செய்திகள்

“தாய் மொழி கண், மற்ற மொழிகள் கண்ணாடி”… நிறைய மொழி பேசத் தெரிஞ்சா நல்லது தானே…. வெங்கையா நாயுடு பளீச்…!!!!

இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் செய்திகளின் எதிர்காலம் என்ற கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பில் 65 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய சக்தியின் கூட்டமைப்பு ஆகும். ஊடகங்கள் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும். தாய்மொழி வளர்ச்சி தவிர பிற மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டும். தாய்மொழி என்பது கண் போன்றது. ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகள் கண்ணாடி போன்றது. கண் பார்வை இருந்தால் மட்டும்தான் கண்ணாடி வேலை செய்யும். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுமே ஊக்குவிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் அவை மக்களின் மொழிகள் ஆகும். அதிக மொழிகள் பேசத் தெரிந்தால் அதிக வாய்ப்புகள் வரும். எனவே மொழி திணிப்பு மற்றும் எதிர்ப்பு என்று நிலைப்பாடு கூடாது. நான் மாநிலங்களவை தலைவராக இருந்தபோது உங்களுக்கு விருப்பப்பட்ட மொழிகளில் பேசிக்கொள்ளுங்கள் என உறுப்பினர்களிடம் கூறினேன். என்னுடைய விருப்பம் எப்போதும் என்னுடைய தாய் மொழி தான். முதலில் தாய்மொழி. அதன் பிறகு சகோதர மொழி. இதைத் தாண்டி எந்த மொழியும் பிரச்சனை கிடையாது. மேலும் மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடைய தாய் மொழியை நன்றாக புரிந்து கொள்வதால் தான் நான் இந்த கருத்தை சொல்கிறேன் என்று கூறினார்.

Categories

Tech |