Categories
டெக்னாலஜி

உங்க ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏற ரொம்ப நேரம் ஆகுதா?… அப்போ காரணம் இதுதான்?…. கவனமா இருங்க…..!!!!!

ஸ்மார்ட் போன் சார்ஜ் ஆக அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது எனில், நீங்கள் முன்னச்சரிக்கையாக சில விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும். சார்ஜ் சீக்கிரம் தீர்ந்துவிட்டால், ஸ்மார்ட் போனில் இணையபாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். வைரஸ், ஹேக்கர்கள் ஊடுருவல் இருப்பின் பேட்டரி சீக்கிரம் காலியாகி விடும். அதற்கேற்ற தரமான சாப்ட்வேர்களையும் நீங்கள் கண்டிப்பாக இன்ஸ்டால் செய்து இணைய திருட்டிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள். பழைய சார்ஜரை தூக்கிபோட்டு விட்டு 20-வாட் பவர் அடாப்டர் கொண்ட சார்ஜரை பயன்படுத்துங்கள்.

ஐபோன் 8(அ) அதற்குப் பிந்தைய பதிப்பு உங்களிடம் இருப்பின் 30 நிமிடங்களில் உங்களது மொபைலை டெட் பேக்கில் இருந்து 50 சதவீதம் பேட்டரி வரை வேகமாக சார்ஜ் செய்யலாம். உங்களுக்கு 1 மணி நேரம் இருந்தால், அதனை முழுமையாக சார்ஜ்செய்யலாம். இந்த சார்ஜர்களில் 10நிமிடங்களில் பேட்டரியை இரட்டை இலக்கங்களால் உயர்த்தலாம். ஆகவே உங்களுக்கு நேரம் குறைவாக இருப்பின் எப்போதும் ஃபாஸ்ட் சார்ஜர் விருப்பத்திற்குச் செல்லவேண்டும். உங்களது ஐபோனை சார்ஜ் செய்வதற்குரிய 2வது வேகமான வழி Apple’s MagSafe சார்ஜர் மற்றும் 20-வாட் பவர் அடாப்டர் ஆகும். எனினும் இது வேலை செய்ய, ஐபோன் 12 (அ) iPhone 13ஐ வைத்திருக்கவும்.

உங்களது ஐபோன் செயலிழந்து விட்டால் 30 நிமிடங்களில் வயர்லெஸ் சார்ஜிங்கில் 30 சதவீதம் பேட்டரியைப் பெறுவீர்கள். ஏராளமான நேரத்தை கணிணி முன் பயன்படுத்தும் நீங்கள், கணிணி வழியாகவே சார்ஜ் செய்யவும் முயற்சி செய்வீர்கள். அது மிகவும் தறவான அணுகுமுறை ஆகும். எப்போதும் உரிய சார்ஜர் வாயிலாக சார்ஜிங் செய்வதை மட்டுமே நீங்கள் வாடிக்கையாக வைத்திருக்கவும். அதேபோல் சார்ஜ் ஆகும் போது மொபைலை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். சார்ஜ் வேகமாக ஆகவேண்டும் எனில் மொபைலின் பிரைட்னஸை குறைத்து விடுங்கள். அத்துடன் மொபைலை ஏரோபிளேன் மோடில் வைக்கலாம். பேட்டரி ஆப்டி மைஸை ஆன்செய்து வையுங்கள்.

Categories

Tech |