Categories
ஆட்டோ மொபைல்

“ACER” நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!!

Acer I series 55 inch UHD 4k ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் டிவியில் மினிமம் பெசல்ஸ் இருக்கிறது. அதன் பிறகு யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி 3.0 உள்ளிட்ட 3 யுஎஸ்பி கனெக்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரேம்லெஸ் டிசைன் உடன், பர்ஃபெக்ட்டான டைனமிக் ரேஞ்ச் இருக்கிறது. இதனையடுத்து செட்டிங்ஸில் பல்வேறு விதமான ஆப்ஷன்கள் இருப்பதோடு, செயலிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் கேம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் போன்ற வசதிகளும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 11 பேசிக்குடன், இன்டர்நெட் வேகத்தை தெரிந்து கொள்வதற்கான ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் டிவியில் ப்ளூடூத் வசதி கொடுக்கப்பட்டுள்ளது, நம்முடைய செல்போனை பயன்படுத்தி டிவியில் வெறும் சவுண்ட் மட்டும் கேட்க்குமாறு மாற்றிக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

வால்யூம் ஆப்ஷனில் ஸ்போர்ட்ஸ், நியூஸ், மியூசிக் மற்றும் சேனல் அனைத்து விதமான ஆப்ஷன்களும் இருப்பதால் நம்முடைய தேவைக்கு ஏற்ப உடனடியாக எந்த சேனலுக்கு வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம். இதைத்தொடர்ந்து ஸ்மார்ட் டிவியுடன் கொடுக்கப் பட்டுள்ள ப்ளூடூத் ரிமோட்டில் குறைவான பட்டன்கள் இருந்தாலும் அதிக வசதிகள் இருக்கிறது. ரிமோட்டில் இருக்கும் ஸ்மார்ட் என்ற பட்டனை கிளிக் செய்தால் டிஸ்ப்ளே ஆஃப் ஆகிவிடும். ஆனால் பாட்டு மற்றும் ஆடியோ மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும். செல்போனில் youtube வீடியோவை உடனுக்குடன் மாற்றி பார்த்துக் கொள்வது போன்று டிவியிலும் பார்த்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன்களுக்கு தனி ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்டோஸ் லேப்டாப் பயன்படுத்தினால் லேப்டாப் ஸ்கிரீனை டிவியில் தெரிவது போன்று மாற்றிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது செல்போனில் இருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்களை பார்ப்பதற்கு செல்போனில் வீடியோக்களை ஓபன் செய்து விட்டு இன்டர்நெட்டை பயன்படுத்தி டிவியில் பார்த்துக் கொள்ளலாம். மேலும் லேசர் வசதி, நைட் மோடு வசதி, ஐ ப்ரோடுக்ஷன் ஆப்ஷன், டோல்பி ஆடியோ, 2ஜிபி ரேம் போன்ற வசதிகளும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 47,999 ரூபாய் ஆகும்.

Categories

Tech |