Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு பறந்த சம்மன்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தேனி மாவட்ட பெரியகுளம் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது தேனி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம். வனத்திற்கு அருகில் தோட்டம் இருப்பதால் தோட்டத்தை சுற்றிலும் சோலார் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இந்த வேலியில் சிக்கி 2 வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டதில் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல், என மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தோட்ட உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தோட்ட உரிமையாளர் ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதால் அவரை விசாரணை செய்வதற்காக மக்களவை சபாநாயகருக்கு தேனி மாவட்ட வனத்துறையினர் கடிதம் அனுப்பி இருந்தனர். தற்போது தோட்ட உரிமையாளர்களான காளியப்பன் மற்றும் தியாகராஜனம் என 3 நபர்களுக்கு சிறுத்தை இறந்தது குறித்து விசாரணைக்கு ஆஜராகும் படி வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு வாரத்திற்கு ஆஜராமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுத்தை இறந்தது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவைத் தொகுதி எம்.பி.ரவீந்திரநாத்துக்கு வனத்துறை சம்மன் அனுப்பி உள்ளதால் இந்த விசாரணையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க உள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |