Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2 ட்வீட்….. ”பட்டைய கிளப்பும்திரெளபதி”…. எச்.ராஜா கொடுத்த சர்டிபிகேட் …!!

திரெளபதியின் பெயரை கேட்டாலே சிலருக்கு பயம் வரும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் என்று புகழ்ந்து பேசினார்.

இதை தொடர்ந்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிடுள்ள கருத்தில் , இன்று திரௌபதி திரைப்படம் பார்த்தேன். அனைத்து பெற்றோரும் தங்களுடைய வயதிற்கு வந்த பெண் குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய படம். நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு என்று பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு ட்வீட்டில் திரெளபதி பெயரை கேட்டாலே சிலருக்கு பயம் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |