Categories
மாநில செய்திகள்

பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு…. மீறினால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுகளை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை மொத்தமாக 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆய்வு மேற்கொண்ட மாநகர காவல் ஆணையர், கோயம்பேடு பகுதியில் மட்டும் வேலூருக்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு கடைகளின் உரிமங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றது. அதில் உள்ளம் இல்லாமல் யாராவது கடை நடத்துவது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.அதே சமயம் அனுமதி அளித்துள்ள நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் 112 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |