Categories
அரசியல்

இந்த தீபாவளிக்கு இதை செய்ய மறந்துறாதிங்க…. குலோப் ஜாம் ரெசிபி இதோ உங்களுக்காக….!!!!

 

குலோப் ஜாம் செய்ய தேவையான பொருள்கள்:

500 கிராம் குலோப் ஜாம் மாவு, 700 கிராம் சர்க்கரை, நெய் தேவையான அளவு, ஏலக்காய் தூள் தேவையான அளவு.

செய்முறை:

முதலில் ஒருபெரிய பாத்திரத்தில் குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை அழுத்தமாக பிசைந்தால் குலோப் ஜாம் பொரிக்கும் போது விரிசல் விழுந்து விடும். மாவை பக்குவமாக பிசைந்த பிறகு தேவையான அளவு நெய்யை அதன் மேலே தடவி ஒரு மூடி போட்டு 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்ச வேண்டும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுடாக்க வேண்டும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிஎண்ணெயில் போட வேண்டும்.  மாவு உருண்டைகளை மெதுவாக திருப்பி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உருண்டைகள் இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அப்பொழுது தான் குலோப் பாகில் நன்றாக ஊறி மிருதுவாக இருக்கும். இதனை 6 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். இப்போது சுவையான குலோப் ஜாம் தயார்.

Categories

Tech |