கேசரி தேவையான பொருட்கள்:
ரவை – 200 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
தண்ணீர் – 400 மி.லி.
நெய் – தேவையான அளவு
முந்திரி பருப்பு – தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு
கேசரி பவுடர் – சிறிதளவு
செய்முறை:
கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு ரவையை வறுக்க வேண்டும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்க வேண்டும். இதனையடுத்து வாணலியில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கேசரி பவுடர் சேர்க்க வேண்டும். பின் ரவையை சிறிது சிறிதாக கொதிக்கும் தண்ணீரில் கொட்டி கட்டிவிழாமல் நன்கு கிளற வேண்டும்.
ரவை நன்கு வெந்ததும் அதில் சர்க்கரையை போட வேண்டும். சர்க்கரை நன்கு இளகி கெட்டிப்படத் துவங்கும். அப்போது கேசரி அடிபிடிக்காமல் இருக்க விடாமல் கிளற வேண்டும். கேசரி நன்கு சேர்ந்து வந்ததும், மீதமுள்ள நெய் விட்டு கிளறி இறக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்தரி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். சுவையான ரவா கேசரி தயார்.