துபாய் திருச்சூர் பகுதியை சேர்ந்த ஃபஹத் என்பவர் வசித்து வருகிறார், அவர் அக்டோபர் 10 ஆம் தேதி துபாயிலிருந்து கொச்சி வந்தார். அப்போது விசாரணையில் அவரது உடைமைகளில் சில ஈரத்துண்டு ஒன்று கவரில் போடப்பட்டிருந்ததை பார்த்த சுங்கத்துறையினர் அது பற்றி கேட்டனர். அதற்கு, தான் விமான நிலைய கழிப்பறையில் குளித்ததாக பதில் அளித்தார். இதனையடுத்து மற்றொரு பையிலும் மூன்று ஈரம் துண்டுகள் இருந்ததால் சுங்கத்துறையினருக்கு சந்தேகம் வலுத்தது. அந்த ஈரத் துண்டுகளை வெளியே எடுத்து பார்த்தபோது அதற்குள் தங்கப் பசை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது தங்கத்தை உருக்கி அதற்குள் துண்டை போட்டு எடுத்து விடுகிறார்கள். அந்த துண்டுகள் தங்க துகள்கள் ஒட்டிக் கொள்கின்றன. பிறகு ஒரு வேதியியல் பொருளை பயன்படுத்தி தங்கத்தை தனியாக பிரித்து விடுகிறார்கள் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல கடந்த மாத ஒருவர் பிடிபட்ட அவர் தான் வைத்திருந்த மரபேட்டிக்குள் தங்க முலாம் கொண்டு பெயிண்ட் போல அடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில் வயிற்றுக்குள் தங்கத்தை வைத்து கடத்தி வந்தால் பிடிபடுவார்கள் என்பதால் விதவிதமாக தங்க கடத்தல் நடந்து வருகிறது. எந்த பழைய முறைகளையும் கடத்தல்காரர்கள் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்துவதில்லை. ஆனால் வயிற்றில் வைத்து தங்கத்தை கடத்தி வருவது மட்டும் அவ்வப்போது நடப்பதாக குறிப்பிடுகிறார்கள்.