ரேஷன் கடையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அனந்தகிரி இரண்டாவது தெரு ரேஷன் கடையில் எடையாளர் மட்டுமே இருப்பதால் ஒருவரை பில் போட்டு முடித்து, அவரே பொருட்களை எடை அளந்து பொது மக்களுக்கு வழங்குவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒருவரே இரு வேலைகளை பார்ப்பதாலும், அதிக எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் இருப்பதாலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே விற்பனையாளர் எடையாளர் என இரு ஊழியர்களை நிரந்தரமாக பணியில் வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.