மின்னல் தாக்கி மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலுப்பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சினையான 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று தனக்கு சொந்தமான வீட்டிற்கு முன்புறம் இருக்கும் தென்னை மரத்தில் 2 பசு மாடுகளையும் அண்ணாதுரை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அண்ணாதுரை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவம் இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் செந்துறை கால்நடை உதவி மருத்துவர் இந்து ஆகியோர் இறந்த மாடுகளை அதே பகுதியில் பரிசோதனை செய்தனர். இதனை அடுத்து மாடுகளுக்கு அரசின் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதேபோல் அழகு என்பவருக்கு சொந்தமான 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாடும் மின்னல் தாக்கி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.