தேவையான பொருட்கள்
- பால் – 1 கப்
- தேங்காய்த் துருவல் – 2 கப்
- சர்க்கரை – 1 கப்
- நெய் – 1/2 கப்
- பாதாம் – 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
முதலில் தேங்காயைத் துருவி பால் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
பாதாம் மற்றும் முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் கடை ஒன்றை சூடாக்கி அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டு நன்றாக கிளறவும்.
அதனுடன் இனிப்புக்கு தகுந்தார்போல் சர்க்கரை சேர்த்து மேலும் நன்றாக கிளறவும்.
இப்போது கெட்டிப் பதத்தில் இருக்கும் தேங்காய் பாலில் நெய் ஊற்றி வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாம் தூவி விடவும்.
மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கிவிடவும்.
சுவைமிக்க தேங்காய் கோவா அல்வா ரெடி.