தீபாவளி பண்டிகையின் முதல் நாளில் தந்தேரஷ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை நடப்பாண்டில் எந்த தேதியில் கொண்டாடுவது என்ற குழப்பம் நிலவுகிறது. இந்த பூஜையை நடப்பாண்டில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு தினங்களில் செய்தால் மிகவும் சிறப்பு. அக்டோபர் 22-ம் தேதி காலை முதல் மறுநாள் மாலை 4:45 மணி வரை தந்தேரஸ் பூஜையை செய்து கொள்ளலாம். இந்த பூஜையை அக்டோபர் 22-ஆம் தேதி காலை 7.01 முதல் 8.11 மணிக்குள் தொடங்கினால் மிகவும் சிறப்பு. அதன் பிறகு பூஜையை சுப முகூர்த்த தினத்தில் செய்வதால் மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வந்து வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
இதனையடுத்து அக்டோபர் 22 மற்றும் 23-ஆம் தேதி பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒருவேளை யாராவது இரும்பு பொருட்களை வாங்க நினைத்தால் அக்டோபர் 23-ஆம் தேதி மாலை நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம். ஏனெனில் தந்தேரஸ் தினத்தில் கூர்மையான பொருட்களை வாங்குவது நல்லது கிடையாது. லட்சுமி குபேர பூஜை செய்வதற்கு அக்டோபர் 23-ஆம் தேதி= நல்ல நாளாக கருதப்படுகிறது. தந்தேரஸ் தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவதுதான் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நாம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்குவதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஆயுர்வேதத்தின் கடவுளாக கருதப்படும் தன்வந்திரியை நாம் பூஜை செய்து வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். இந்த பூஜையை மனதில் வைத்து தான் தீபாவளிக்கு முந்தைய நாளன்று வீட்டில் ஏதாவது மருந்து அல்லது லேகியம் தயார் செய்து கொடுக்கிறார்கள். மேலும் தந்தேரஸ் திருவிழாவில் நாம் சுபமுகூர்த்த தினத்தில் பூஜைகளை செய்து செல்வம் வளம் பெற்று சிறப்பாக வாழ்வோம்.