இயக்குனர் ஜியோ பேபியை நெட்டிஷன்கள் கிண்டலடித்து வருகின்றார்கள்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படம் காதல். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார் ஜோதிகா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் ர்-என்ட்ரி கொடுக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்குகின்றார். இவர் சென்ற வருடம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பெண்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான்.
இந்த படத்தை மம்முட்டி தனது சொந்த தயாரிப்பாக தயாரிக்கின்றார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா பூஜையுடன் ஆரம்பித்திருக்கின்றது. இதை தொடர்ந்து இயக்குனர் ஜியோ பேபியை சோசியல் மீடியாவில் இணையதள வாசிகள் கிண்டலுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அவர் இதற்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில் தனது திரைப்படங்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் பூஜையில் எனக்கு விருப்பமில்லை எனவும் நேரடியாக படப்பிடிப்பிற்கு செல்வதை தான் விரும்புவதாகவும் கூறினார்.
ஆனால் மம்முட்டியை பொறுத்தவரை தனது திரைப்படங்களின் துவக்க விழா மற்றும் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக நடத்தப்படும் பூஜைக்கு அதிக கவனம் செலுத்துவார். இதனால் மம்முட்டியை வைத்து ஜியோ பேபி இயக்கும் திரைப்படத்திற்கு வழக்கப்படி தொடக்க விழா பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் இயக்குனரை விமர்சனம் செய்து வருகின்றார்கள்.