Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” எப்படி கொண்டாட வேண்டும்….? உங்களுக்கான தகவல்…!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை கங்கா ஸ்நானம் என அழைக்கின்றனர். நல்லெண்ணெயில் லட்சுமிதேவி வாசம் செய்வதால் அன்று காலை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனை அடுத்து வீடுகளை சுத்தப்படுத்தி சாமி படத்தின் முன்பு வீட்டில் தயார் செய்யப்பட்ட பலகாரம், இனிப்பு போன்றவற்றை வைக்க வேண்டும். பின்னர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று சாமியை வணங்குவது மிகவும் நல்லது.

காலத்திற்கு ஏற்ப பல மாற்றங்கள் வந்தாலும் தீபாவளி தினத்தில் எண்ணெய் குளியல், இனிப்பு, பலகாரம், பட்டாசு வெடிப்பது, புத்தாடை ஆகியவற்றில் எந்த மாறுதலும் வரவில்லை. தீபாவளி பண்டிகை இந்து, சீக்கியம், பௌத்தம் என அனைத்து மதத்திலும் மிக பிரபலமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும் விளக்கு ஏற்றி வழிபட்டால் சாமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

தீபாவளி தினத்தில் அரசு அனுமதித்த காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 7 மணி முதல் 8 வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர் எரித்த பட்டாசுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி தீபாவளியை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

Categories

Tech |