Categories
டெக்னாலஜி

தீபாவளி கொண்டாட்டம்…. பாதுகாப்பாக இருக்க எளிய டிப்ஸ் இதோ….!!!

உலகம் முழுவதும் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட எளிய டிப்ஸ்:

  • சிறுவர்கள் புல்லட் வெடி அணுகுண்டு ராக்கெட் போன்றவற்றை வெடிக்காமல் இருப்பது மிகவும் நல்லது
  • பெரியவர்களின் கண்காணிப்போடுதான் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
  • தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை வாங்கி உடுத்தியிருந்தாலும் பட்டாசு வெடிக்கும் போது காட்டன் துணிகளை அணிந்திருப்பது நல்லது
  • பட்டாசு வெடிக்கும் போது ஒரு வழியில் தண்ணீரை வைத்துக் கொண்டால் விபத்து ஏற்பட்டால் உடனே அதனை ஊற்றி அணைத்து விடலாம்
  • பட்டாசு வெடிக்கும் போது வரும் புகையை சுவாசிப்பது நல்லதல்ல ஏனென்றால் அது நுரையீரல் அலர்ஜி ஆஸ்துமா ஆகியவர்களை மிகவும் பாதிக்கும்
  • பட்டாசுகளை கையில் வைத்துக் கொண்டு கட்டாயம் வெடிக்கக் கூடாது
  • பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் கட்டாயம் அதன் மீது தண்ணீரை ஊற்ற கூடாது உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்
    பட்டாசு வெடித்த பிறகு நன்கு கைகளை கழுவி விட்டு சாப்பிட வேண்டும்

Categories

Tech |