Categories
சினிமா தமிழ் சினிமா

SHOCK! பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய ஜி.பி முத்து…. காரணம் என்ன….? கவலையில் ரசிகர்கள்….!!!!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது 6-வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது‌. சொல்லப்போனால் ஜி.பி முத்துவுக்காகவே பல பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர் என்று கூறலாம்.

இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்து முத்து இடையே முதல் வாரத்தில் இருந்து கடுமையான மோதல் இருந்தது. கடந்த சில நாட்களாகவே மிகவும் மன வேதனையில் இருந்து ஜி.பி முத்து பிக்பாஸ் வீட்டை வெளியேற வேண்டும் என தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் பிக் பாஸ் அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டில் இருக்குமாறு கூறியது. இந்நிலையில் ஜிபி முத்து தற்போது வீட்டை விட்டு வெளியேறியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலால் ஜிபி முத்துவின் ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.

Categories

Tech |