கேரளாவில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் இன்று பட்டினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அக்டோபர் 25ஆம் தேதி வரை பல இடங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேசமயம் கனமழை காரணமாக லட்சத்தீவு கடற்கரையில் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு அனுமதியில்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.