புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பார்த்திபன் சிங்கிள் டேக்கில் உருவாகும் படம் பற்றி கூறியுள்ளார்
கோவையில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று தான் எழுதிய இரண்டு புத்தகங்களை வெளியிட்ட பார்த்திபன் அவர்கள் விழாவில் பேசிய பொழுது ரசிகர்கள் இருவர் அவர்கள் எழுதிய புத்தகங்களை பார்த்திபனுக்கு பரிசாக வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய பார்த்திபன் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படமான இரவின் நிழல் படத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில்இரவின் நிழல் திரைப்படம் முழுவதும் சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட இருப்பதாகவும் சுமார் ஒன்றரை மணி நேரம் படம் தயாராகும் எனவும் இத்திரைப்படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் நடிகர் பார்த்திபன்.