சென்னை கிராமப்புற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக ஊரக திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள செய்தியில், கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கு நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது . உதவித்தொகை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி உள்ள மாணவர்கள் வருகின்ற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.