கொரோனா வைரசுக்கு இன்னும் ஒரு வருடத்தில் தடுப்பூசி தயாராகிவிடும் என அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது சீனா தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனோ வைரஸில் இருந்து பாதுகாக்க உலக விஞ்ஞானிகள் மருந்தை கண்டுபிடிக்க போராடி வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்கா சுகாதாரத்துறை இதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது அது செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
கொரோனோவிற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், அதற்கான சோதனை ஓட்டம் 6 மாதத்தில் தொடங்கப் பெற்ற நிலையில், அதன் முழுமையான தடுப்பூசி ஒரு வருடத்திற்குள் தயாராகும் என்று கூறப்பட்டுள்ளது.