Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்…. பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுக்கும் “சர்தார்” திரைப்படம்…. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்…!!!!

நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார்” திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் “விருமன்” திரைப்படம் வெளியானது. நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கடந்த மாதம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளி வருகின்றார் நடிகர் கார்த்தி. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகின்றது. இதனிடையில் மித்ரன் இயக்கத்தில் “சர்தார்” திரைப்படத்திலும் நடித்தார் கார்த்தி.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த  திரைப்படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார் நடிகர் கார்த்தி. இந்நிலையில் தீபாவளி ரிலீசாக நேற்றைய தினம் வெளியாகியுள்ளது “சர்தார்”. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை இணையத்தில் குவித்து வருகின்றனர். நடிகர் கார்த்தியின் நடிப்பு படத்தில் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஆரம்பம் இறுதி வரை நிறைய ட்விஸ்ட் இருப்பதாக படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கின்றார் கார்த்தி. இது குறித்து தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்திக் கூறியதாவது, “நன்றி மக்களே… “சர்தார்” படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய உங்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்களது வரவேற்பால் சர்தார் படக்குழுவினர் அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளோம்” என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |