டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்கள் என்பது பற்றி பார்ப்போம்..
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரமாதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது. பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் இன்று மோதும் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் டி20 உலக கோப்பை வரலாற்றில் இதுவரை இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் மற்றும் விக்கெட் எடுத்தவர்கள் யார் என்பது பற்றி பார்ப்போம். அதன்படி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 33 போட்டிகளில் 847 ரன்களை குவித்த ரோஹித் சர்மா இந்திய அணிக்காக அதிக ரன் குவித்தவரில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக 21 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 845 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 உலகக் கோப்பையில் 18 போட்டிகளில் 26 விக்கெட்டுகளுடன் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரைத் தொடர்ந்து 22 போட்டிகளில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா 21 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் ஹர்பஜன் சிங் 16 மற்றும் இர்பான் பதான் 16 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.