Categories
மாநில செய்திகள்

தமிழக துறைமுகங்களில்…. 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. இது அந்தமான் தீவுகள் போர்ட் பிளேயருக்கு வட-வட மேற்கில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுக்கு தென்-தென் கிழக்கே ஆயிரத்து 460 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அத்துடன் இது வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற அதிகவாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 -75 கி.மீ வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அக்டோபர் 24ம் தேதி காலை மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெறவும் வாய்ப்பு உள்ளது. அதன்பின் வடக்கு – வட கிழக்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 25 அதிகாலையில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையில் வங்காளதேச கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன் தூத்துக்குடி போன்ற துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கடலுக்கு மீன்பிடிக்க போகவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |