பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு எதிர்கொள்கிறது.
பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் இன்று மோதும் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆட தயாராக இருக்கிறது.
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி
பாகிஸ்தான் அணி :
பாபர் ஆசம் (கே), முகமது ரிஸ்வான் (வி.கீ), ஷான் மசூத், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஹைதர் அலி, ஷதாப் கான், ஹாரிஸ் ரவுஃப், முகமது நவாஸ், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி.
இந்திய அணியில் தமிழக வீரர்கள் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இடம்பெற்று இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.