திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தரசன் அவர்கள், தோழமைக் கட்சியை சார்ந்தவர்கள், பல நேரங்களில் எங்களுடைய துறை சார்ந்து ஏதாவது ஒரு விஷயம் வந்தால் அவர்களிடம் இருந்து தான் எங்களிடம் சொல்வார்கள்.
தோழமைக் கட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள் ? ஏதோ எங்களிடம் வந்து கூட்டணிக்காக, தேர்தலுக்காக அல்ல. கொள்கைகளுக்காக இருக்ககூடிய தலைவர்கள் தான் இங்கே இருப்பவர்கள் எல்லாம். தம்பி எனக்கு தெரிந்து இப்படி ஒரு செய்தி வருகிறது, இந்த துறை சார்ந்து… இதை கொஞ்சம் என்னவென்று கவனம் செலுத்துங்கள். இதில் நாம் ஏமார்ந்து விடக்கூடாது, இப்படி என்று ஒரு அண்ணன்களாக எங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடியவர்கள் தான், மேடையில் இருக்கின்ற இவர்களை போன்றவர்களெல்லாம்.
இவர்களெல்லாம் இன்றைக்கு இந்த ஆட்சியில் நாம் இருக்கிறோம், நாமெல்லாம் இருக்கிறோம் என்று சொன்னால், இவர்களெல்லாம் கலங்கரை விளக்கு மாதிரி. சரியான முறையில் படகு சென்று கொண்டிருக்கிறதா ? ஏதாவது ஒரு தவறு என்றால் நாளைக்கு நம்மளை தான் கேட்பார்கள்..
இந்த கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள் என்று கை நீட்டி குறை சொல்லக்கூடாது என்கின்ற, அளவிற்கு நம்மளோட தோழமையோடு இருக்கக்கூடியவர் தான். இன்றைக்கு இவர்கள் எல்லாம் வைத்து இதுபோன்ற கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர் நம்முடைய சேகர் பாபு அவர்கள் என தெரிவித்தார்.