8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர் கொண்டது.
பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் இன்று மோதும் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடி வருகின்றது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக முகம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். 2ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங்கின் முதல் பந்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டக் அவுட் அன நிலையில் ஷான் மசூத் களமிறங்கி, முகம்மது ரிஸ்வான்_னுடன் ஜோடி சேர்ந்தார்.
பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 15 இருந்த போது முகம்மது ரிஸ்வான் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய இப்திகார் அகமது – ஷான் மசூத்_துடன் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர் அணியின் ஸ்கோர் 91ஆக இருந்த போது இப்திகார் அகமது 51 ரன்னை 34 பந்தில் எடுத்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.