தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிப்பில், நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றலுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றலுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும்.
தீபாவளி பண்டிகையான நாளை 24ஆம் தேதி மற்றும் 25 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வருகின்ற 26ஆம் தேதி தமிழக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானதும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.