தமிழ் சினிமாவில் வாலி, குஷி படங்களை இயக்கி பிரபலமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க தொடங்கினார். கடந்த 2004 ஆம் ஆண்டு க்கு பிறகு இவர் பெரும்பாலும் படங்களை இயக்கவில்லை. இருப்பினும் 2015 ஆம் ஆண்டு இசை படத்தை இயக்கி, தயாரித்து வெளியாகிறது. ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா பட இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ‘கில்லர்’ என்ற பேரில் உருவாக உள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி அதில் நடிக்க உள்ளதாகவும் கார் ரேஸை மையமாகக் கொண்டு கதை உருவாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.