சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வரவேண்டிய பாக்கிகள் வசூலாகி மனமகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் உண்டாகும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். வியாபார விருத்திக்கு வித்திடும், மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றியும் பெறுவீர்கள். கௌரவம், அந்தஸ்து இன்று உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகளும் வசூலாகும்.
ஆர்டர்கள் வருவது திருப்திகரமாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். புதிய பொறுப்புகளும் கூடி வரும், இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு சக மாணவரின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு வாரம் வாரம் பழகிக்கொள்ளுங்கள், இதனால் உங்களுடைய கர்மங்கள் அனைத்துமே நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்:-4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்