இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் அதுவும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.அதாவது ரயில் கடையில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ள நிலையில் அவற்றை கட்டாயம் பயணிகள் எடுத்துச் கூடாது.
எந்த ஒரு பயணியும் ரயில் பயணத்தின் போது தன்னுடன் இதுபோன்ற எதையும் எடுத்துச் செல்ல முடியாது. அதாவது மனிதனின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்லக்கூடாது என இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.அதன்படி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்வதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்,பட்டாசு மற்றும் கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் அவ்வாறு எடுத்துச் சென்றால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.