Categories
டெக்னாலஜி

அடடே சூப்பர்!…. கம்மியான விலையில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி…. பிளிப்கார்டில் அதிரடி சலுகை…..!!!!

பிளிப்கார்டு பிக் தீபாவளி சேல் எனும் சிறப்பு விற்பனையானது Flipkart ஷாப்பிங் தளத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்றே கடைசி நாளாகும். இவ்விற்பனையின் வாயிலாக  ஆடைகள்,உணவுப்பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் ஆகிய எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் என அனைத்தையும் மலிவான விலையில் வாங்கலாம். 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் 55இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சிறந்த ஸ்மார்ட் டிவியை வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

தாம்சன் 9 ஆர் ப்ரோ 139 செமீ (55 இன்ச்) அல்ட்ரா எச்டி(4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி, இந்த தள்ளுபடியில் கிடைக்கிறது. இது பிளிப்கார்டு தளத்தில் ரூபாய்.46,999க்கு கிடைக்கிறது. பிளிப்கார்டு பிக் தீபாவளிசேல் கீழ் இந்த டிவி 41 சதவீத தள்ளுபடி விலையில் கொடுக்கப்படுகிறது. அதன்படி, ரூபாய்.27,499-க்கு விற்கப்படுகிறது. எஸ்பிஐ-யின் கிரெடிட்கார்டை வாங்கும்போது பயன்படுத்தினால், உங்களுக்கு ரூபாய்.1,750 தள்ளுபடி கிடைக்கும்.

அதன்பின் இந்த டிவியின் விலையானது ரூபாய்.25,749 ஆக இருக்கும். தாம்சன் 9 ஆர் ப்ரோ 139 செமீ (55 இன்ச்) அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை ரூபாய்.15,000க்கும் குறைவாக வாங்க எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கிச் சலுகைக்குப்பின் ரூபாய்.25,749க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட் டிவிக்கு ரூபாய்.11,000 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இச்சலுகையின் முழுப்பலனையும் நீங்கள் பெற்றால், 55இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த டிவியை ரூபாய்.14,749க்கு வாங்கலாம்.

Categories

Tech |