Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்”… போதிய பேருந்து இல்லாததால் அலைமோதிய கூட்டம்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக டெல்டா மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தார்கள். அதிக அளவில் மக்கள் குவிந்த நிலையில் அதற்கு ஏற்ப தஞ்சையில் இருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். மதுரைக்கு செல்லக்கூடிய பேருந்துகளை பார்த்தவுடன் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஓடி சென்று பேருந்துகளில் ஏற முயற்சித்தார்கள். மேலும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது.

இதனால் சிரமத்திற்கு மத்தியில் பேருந்துகளில் ஏறினாலும் அங்கே நிற்பதற்கு கூட இடமில்லை. மதுரை நோக்கிச் சென்ற பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் படிக்கட்டுகளில் நின்றபடி மக்கள் பயணம் செய்தார்கள். இது போலவே கும்பகோணம், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் மக்கள் அதிக அளவில் காத்திருந்தார்கள். ஆனால் மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

Categories

Tech |