Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு.. வாய்ப்புகள் கைகூடி வரும்.. நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய நிதி மேலாண்மை உயரும் நாளாகவே இருக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் உங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். இன்று  சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது மட்டும் மிகக் கவனமாக பேசுவது, கோபத்தை குறைப்பதும் நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நிலுவையிலுள்ள காரியங்களும் சிறப்பாகவே முடிய வழிபிறக்கும்.

வரவேண்டிய பணம் கையில் வந்து சேரும், இரவு, பகலாக உழைக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை கொஞ்சம் சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அது மட்டும் இல்லை இன்று சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும், கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் எப்பொழுதும் போலவே வாரம், வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுக்க பழகிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்மங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீலம் நீல நிறம்

Categories

Tech |